2069 | முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும் பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே? (19) |
|