2072 | நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும் எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே (22) |
|