| 2073 | உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச் சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே (23) |
|