2075மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்
      கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே
      தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்
      என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
      பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே
      புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே             (25)