2076தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
      தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த
      அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்
      அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது
      நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே             (26)