2077 | செங் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப் பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால் இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே (27) |
|