2081வையம் தகளியா வார் கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய
சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை-
இடர்-ஆழி நீங்குகவே என்று             (1)