209கன்னல் இலட்டுவத்தோடு சீடை
      காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்
      இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்
      பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன்மகன் தன்னை அசோதை நங்காய்
      கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே             (9)