2102அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்-
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும்
காம்பு ஏய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு             (22)