2108கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை             (28)