2115ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி அடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து
முடியான் படைத்த முரண்?             (35)