2141உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங் கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியில் ஆய புணர்ப்பு             (61)