2146காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக்கண்
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
பேர் ஆழி கொண்டான் பெயர்             (66)