2154ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்று ஒருபால்
மங்கையான் பூமகளான் வார் சடையான் நீள் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு             (74)