2155காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி             (75)