முகப்பு
தொடக்கம்
2168
நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு
என் ஆகில் என்னே எனக்கு? (88)