2171ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ஏனத்து
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்?             (91)