2175நா வாயில் உண்டே நமோ நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர்
தீக் கதிக்கண் செல்லும் திறம்?             (95)