222தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு
      தளர்நடைஇட்டு வருவான்
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு
      புள்ளுவன் பொய்யே தவழும்
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை
      துஞ்ச வாய்வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே              (1)