2230அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து             (50)