2239அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து             (59)