224கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
      குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
      பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ உன்னை
      என்மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே (3)