2251இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி விடம் காலும்
தீ வாய் அரவு அணைமேல் தோன்றல் திசை அளப்பான்
பூ ஆர் அடி நிமிர்த்த போது             (71)