2254யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம் பெருமான் யானே
இருந் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெருந் தமிழன் நல்லேன் பெருகு             (74)