2266நவின்று உரைத்த நாவலர்கள் நாள் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்? பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பு அரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன்கொல் இன்று?             (86)