227கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்
      கற்றாநிரை மண்டித் தின்ன
விரும்பாக் கன்று ஒன்று கொண்டு விளங்கனி
      வீழ எறிந்த பிரானே
சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்
      சூழ்வலை வைத்துத் திரியும்
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன்
      உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (6)