2279இறை எம் பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய்ம் மலர்கள் தூவ அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறள் உருவாய்
மாவடிவின் மண் கொண்டான் மால்             (99)