228மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு
      வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி
சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்
      சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள்- தாயம் இலேன் எம்பெருமான் உன்னைப்
      பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே             (7)