2302வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடி ஆர் மலர் தூவி காணும் படியானை
செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு             (22)