2307ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங் கடலை நேரே
கடைந்தானை காரணனை நீர் அணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து?             (27)