231தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்
      சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை
      மூவேழு சென்றபின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை
      உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
      அஞ்சுவன் அம்மம் தரவே (10)