2313பாலகனாய் ஆல் இலைமேல் பைய உலகு எல்லாம்
மேல் ஒருநாள் உண்டவனே! மெய்ம்மையே மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று             (33)