2316கைய கனல் ஆழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய
படை பரவை பாழி பனி நீர் உலகம்
அடி அளந்த மாயன் அவற்கு             (36)