2318தானே தனக்கு உவமன் தன் உருவே எவ் உருவும்
தானே தவ உருவும் தாரகையும் தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இறை             (38)