2319இறை ஆய் நிலன் ஆகி எண் திசையும் தான் ஆய்
மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் பிறை வாய்ந்த
வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்             (39)