2329செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்கு ஆய் முற்றல்
முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரிச்
சுரி ஏறு சங்கினாய்! சூழ்ந்து             (49)