2331அவனே அரு வரையால் ஆ நிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே
கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்காபுரம் எரித்தான் எய்து             (51)