2417வான் உலவு தீவளி மா கடல் மா பொருப்பு
தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு                 (37)