2431எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? எம் பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புனக் காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண் எல்லாம் உண்டோ விலை?                 (51)