2457தற்பு என்னைத் தான் அறியானேலும் தடங் கடலைக்
கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் என் கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான்
எவ் வினையும் மாயுமால் கண்டு                 (77)