2464பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன்;அவன் எனக்கு நேரான் அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழக் காதல் பூண்டேன் தொழில்    (84)