2469பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம்
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரைக்
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு                 (89)