2478செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ!
முழு நீர் முகில் வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம்
தொழுநீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே 2