2479குழல் கோவலர் மடப் பாவையும் மண்மகளும் திருவும்
நிழல்போல்வனர் கண்டு நிற்கும்கொல் மீளும்கொல் தண் அம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும்
தழல் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே? 3