2480தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாம் இலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே? 4