2483ஞாலம் பனிப்பச் செறுத்து நல் நீர் இட்டு கால் சிதைந்து
நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூங்
காலம் கொலோ? அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே 7