2494கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றிச் சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுந்த அக் காலம் கொலோ? புயல் காலம்கொலோ?
கடல் கொண்ட கண்ணீர் அருவிசெய்யாநிற்கும் காரிகையே 18