2495காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரி கை ஏறி அறையிடும் காலத்தும் வாழியரோ
சாரிகைப் புள்ளர் அம் தண்ணம் துழாய் இறை கூய் அருளார்
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்மொழிக்கே 19