2499புனமோ? புனத்து அயலே வழிபோகும் அரு வினையேன்
மனமோ? மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் தெய்வத்து
இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே? 23