2509அருள் ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ?
தெருளோம் அரவணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே 33